தேனி, ஜூலை 23: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாண்டியன், மாநிலகுழு உறுப்பினர் ராஜப்பன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, இடைக்கமிட்டி நிர்வாகிகள் மொக்கப்பாண்டி, கர்ணன், சங்கர். போடி மூக்கையா, செல்வராஜ், தேவாரம் சுருளிவேல் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, வனஉரிமைச் சட்டத்தை அமல்படுத்தி விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும், வனவிலங்கு பயிர்சேதத்திற்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும், உயிரிழப்புக்கு ரூ.10 லட்சம் வழங்குவதை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், காயம்பட்டவர்களுக்கும் உடல் ஊனம் ஆனவர்களுக்கு ரூ.50 ஆயிரம் என்பதை உயர்த்தி வழங்க வேண்டும எனவும், சேதமடையும் பயிர்களுக்கு பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை அமலாக்கிட வேண்டும் எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
The post விவசாயிகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.