நாகர்கோவில், ஜூலை 23: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று காலையும் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை கொட்டியது. மாவட்டத்தில் நேற்று காலையில் பாலமோர் 4.2, தக்கலை 2.8, இரணியல் 6.4, களியல் 3.2 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.48 அடியாகும். அணைக்கு 445 கன அடி தண்ணீர் வரத்து கணப்பட்டது. 380 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டிருந்தது. 254 கன அடி தண்ணீர் உபரியாக மறுகாலில் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 73 அடியாகும். அணைக்கு 367 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 460 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 15.15 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 40 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 15.25 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 15.5 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 47.82 அடியும் நீர்மட்டம் உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 22 அடியாகும்.
The post குமரி முழுவதும் சாரல் மழை appeared first on Dinakaran.