அவருக்கு பதவி வழக்கப்பட்டபோதே பல்வேறு சர்ச்சைகளை முன்வைத்தனர். யு.பி.எஸ்.சி. நேர்மையாக செயல்படுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அண்மைக்காலமாக யு.பி.எஸ்.சியில் தொடர்ச்சியாக நிலவக்கூடிய சர்ச்சைகள், பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது எழுந்த சர்ச்சை, அதே போன்று தேர்வில் தேர்வாகக்கூடிய ஐ.ஏ.எஸ்.கள் சரியான பின்னணியில் இருந்து தேர்வாகியுள்ளனரா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவருடைய தரப்பில் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார். இவருடைய பதவிக்காலம் என்பது 2029ம் ஆண்டு வரை உள்ளது. இவருடைய ராஜினாமா ஏற்கும் பட்சத்தில் விளக்கம் என்பது முக்கியமானதாக உள்ளது. ஆனால் அவர் தரப்பில் சரியான விளக்கம் என்பது அளிக்கப்படவில்லை என்பதால் அவருடைய ராஜினாமா இதுவரை ஏற்றுக்கொள்ள படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவருடைய பதவிக்காலம் 5 ஆண்டுகள் உள்ளது. இருப்பினும் இவர் ராஜினாமா செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
The post தேர்வு சர்ச்சைகள்: பதவிக் காலம் முடியும் முன்பே யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா..!! appeared first on Dinakaran.