அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பெரும்பேர் கண்டிகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

மதுராந்தகம்: தமிழ்நாடு முதல்வர் ஊரக பகுதியில் அரசு துறைகளின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். ஆர்டிஓ தியாகராஜன், தாசில்தார் துரைராஜ், மாவட்ட கவுன்சிலர் வசந்தா கோகுலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, மக்களுடன் முதல்வர் முகாமை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசுகையில், ‘மக்களுடன் முதல்வர் திட்டம் உடனுக்குடன் மக்களுக்கு பயனளிக்கும் திட்டமாக செயல்படுகிறது. நீங்கள் கொடுக்கும் மனுக்களின் மீது அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமை தொகை விடுபட்டவர்கள் இந்த முகாமில் மனு அளித்துள்ளீர்கள் அந்த மனுவையும் பரிசீலனை செய்து உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்த முகாமில், சுகாதாரத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை உள்ளிட்ட 15 அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் கோகுலக்கண்ணன், ஒன்றிய செயலாளர் தம்பு, ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி, சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் பேக்கரி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம், உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் ஒன்றுக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி மக்களுடன் முதல்வர் திட்டம் ஊரப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் நேற்று நடந்தது. இதில், திமுக ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி தலைமை தாங்கினார். மேலும், துணை தலைவர் ரேகாகார்த்திக், வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, கலைச்செல்வன் ஆகியோர் முன்னில வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டு, மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், ஒன்றிய கவுன்சிலர்கள் மோகனாகண்ணன், தினேஷ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

The post அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பெரும்பேர் கண்டிகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: