அரியக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

காரைக்குடி, ஜூலை 17: காரைக்குடி அருகே அரியக்குடி, இலுப்பக்குடி, அமராவதிபுதூர் ஊராட்சி பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. தேவகோட்டை கோட்டாசியர் பால்துரை தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், சாக்கோட்டை ஒன்றியக்குழு சேர்மன் சரண்யா செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நலத்திட்ட உதவிகளை வழங்கி எம்எல்ஏ மாங்குடி பேசுகையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஒவ்வொரு கிராமங்களிலும் நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டள்ளார். அதிகாரிகள் மக்களை நேரடியாக சந்தித்து தேவையானதை செய்து தர வேண்டும் என்பதற்கான இத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 15 துறைகள் சேர்ந்து 44 வகையான திட்டங்களை நேரடியாக வந்து அதிகாரிகள் செய்து தருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 70 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, என்றார். நிகழ்ச்சியில் வட்டாசியர் ராஜா, திமுக ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, முன்னாள் ஒன்றியக்குழு பெருந்தலைவர் முத்துராமலிங்கம், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் சுந்தரம், ராஜேஸ்குமார், ஒன்றிய உதவி பொறியாளர் சரவணமுத்துராமலிங்கம்ஒன்றியகுழு உறுப்பினர் சொக்கலிங்கம், ஊராட்சி தலைவர்கள் சுப்பையா, வைரமுத்துஅன்பரசு, அமராவதிபுதூர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அரியக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: