இளையான்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணி செய்ய புதிய பேட்டரி வாகனங்கள்: எம்எல்ஏ தமிழரசி துவக்கிவைத்தார்

 

இளையான்குடி, ஜூலை 16: இளையான்குடியில் பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட புதிய பேட்டரி வாகனங்களை எம்எல்ஏ தமிழரசி துவக்கிவைத்தார். இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளின் சுகாதார பயன்பாட்டிற்காக இளையான்குடி பேரூராட்சிக்கு புதிய பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது. பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டு பகுதிகளிலும் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. அதனை சுலபமாக கையாளும் வகையில் 15 பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

செயல் அலுவலர் கோபிநாத் வரவேற்றார். எம்எல்ஏ தமிழரசி தலைமை தாங்கி ேபட்டரி வாகனங்களின் செயல்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் நஜுமுதீன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன், வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன், பேரூராட்சி துணை தலைவர் இப்ராகீம், வார்டு உறுப்பினர்கள் செய்யது ஜெமிமா, தௌலத், நூருல் சாரியால், கிருஷ்ணவேணி, நடராஜன், ஜலாலுதீன், நாகூர் மீரா, சேக் முகமது, ராஜவேலு, திமுக இளைஞரணி அமைப்பாளர் பைரோஸ்கான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post இளையான்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணி செய்ய புதிய பேட்டரி வாகனங்கள்: எம்எல்ஏ தமிழரசி துவக்கிவைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: