புதுடெல்லி: தேசிய அளவில் போதைப்பொருள் தடுப்பு உதவி மையம் நாளை மறுதினம் துவங்கப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல், துஷ்பிரயோகம் ஆகியவற்றை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஒன்றிய மற்றும் மாநில அமைப்புக்களின் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் 7வது கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் நடக்கும் இந்த கூட்டத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்பு உதவிமையத்தை தொடங்கி வைக்கிறார். அப்போது அதற்கான தொலைபேசி எண்ணையும் அமைச்சர் அமித் ஷா அறிவிப்பார். மேலும் ஜம்மு காஷ்மீரின் நகரில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் மண்டல அலுவலகத்தையும் அவர் வீடியோகான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார். மேலும் போதைப்பொருள் கட்டுப்பாடு பணியகத்தின் 2023ம் ஆண்டு அறிக்கையும் வெளியிடப்படும். 2047ம் ஆண்டு போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற இலக்கை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைளை அரசு மேற்கொண்டு வருகின்றது.
The post நாளை மறுநாள் தேசிய போதைப்பொருள் தடுப்பு உதவி மையம் துவக்கம் appeared first on Dinakaran.