காரைக்குடி, ஜூலை 13: காரைக்குடி அருகே கண்டனூர் பேரூராட்சி 8வது வார்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட போர்வேல் மற்றும் குடிநீர் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. செயல் அலுவலர் ஈஸ்வரி வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் சங்கீதா செல்லப்பன் தலைமை வகித்தார். புதிய குடிநீர் தொட்டியை மக்களுக்கு அர்ப்பணித்து எம்எல்ஏ மாங்குடி பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து திட்டங்களும் கிராமப்புறங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே தீட்டி வருகிறார்.
நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என முதல்வர் அறிவித்து வரும் திட்டங்களால் கிராமங்கள் தன்னிறைவு பெற்று வருகிறது. ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரடியாக சென்று அவர்களின் கோரிக்கை குறித்து கேட்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான கிராமங்களில் பஸ் வசதி வேண்டும் எனவும், கடந்த காலங்களில் இயக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுவரை பல்வேறு பகுதிகளுக்கு புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கப்பட்டுள்ளது என்றார்.
The post முதல்வரின் திட்டங்களால் தன்னிறைவு பெற்ற கிராமங்கள்: எம்எல்ஏ மாங்குடி பெருமிதம் appeared first on Dinakaran.