சிவகங்கை, ஜூலை 12: சிவகங்கை மண்டல கூட்டுறவுச் சங்க பணியாளர்களின் குறைதீர்வு முகாம் பற்றி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘‘கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் நிர்வாகத்திற்கிடையே இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும்.
அதன் மூலம் பணியாளர்களுடைய பணித்திறனை மேம்படுத்தி, உறுப்பினர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் பொருட்டு பணியாளர்களின் பணி தொடர்பாகவும், குறைகளை விதிகளுக்கு உட்பட்டு தீர்வு செய்யும் வகையிலும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மண்டல அளவில் ”பணியாளர் நாள் நிகழ்ச்சி” நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதல் பணியாளர் நாள் நிகழ்ச்சி இன்று (12.7.2024) காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற உள்ளது.
இதில் சிவகங்கை மண்டல கூட்டுறவு நிறுவனங்களில் தற்போது பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற,பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை மண்டல இணைப்பதிவாளரிடம் நேரில் வழங்கலாம். மேலும், பெறப்படும் கோரிக்கை விண்ணப்பங்கள் உரிய சட்ட விதிகளுக்குட்பட்டு அரசாணை மற்றும் பதிவாளர் கடிதங்கள். சுற்றறிக்கைக்குட்பட்டு உடன் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
The post இன்று குறைதீர்வு முகாம் appeared first on Dinakaran.