தடுப்பணை கட்டுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு

அரூர், ஜூலை 9: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டி கல்லாற்றில், மழை காலங்களில் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக செல்கிறது. இதை தடுக்க, கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம், புதூர் கோட்டச்சரடு, மங்களப்பட்டி, கோட்டப்பட்டி, சூரநத்தம், செங்கான்டிப்பட்டி, கட்டகாடு உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். எனவே, காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

The post தடுப்பணை கட்டுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: