தற்காலிக ஆசிரியர் காலி பணி இடத்திற்கு இன்றுக்குள் விண்ணப்பம் வரவேற்பு

திருவாரூர், ஜூலை 8: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அபிசேககட்டளை மற்றும் பழவனக்குடி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கபள்ளியில் காலியாகவுள்ள தலா 2 இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கும், விஷ்ணுபுரம், கூந்தலூர், கூத்தனூர், வேலங்குடி, திருகண்டீஸ்வரம் மற்றும் உதயமார்த்தாண்டபுரம் ஆகிய அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கபள்ளிகளில் காலியாகவுள்ள தலா ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கும் என மொத்தம் 10 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக பணிக்கு மாதம்
தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்களுக்கு வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன் டெட் பேப்பர் 1ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்வாறு பின்பற்றப்படும். ஆதிதிராவிடர் அல்லது பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை கடைபிடிக்கப்படும். பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தை உரிய கல்வித்தகுதி சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் இன்று (8ம் தேதி) மாலை 5 மணிக்குள் திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
 பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
பஸ் நிலையத்தில் இடநெருக்கடி காரணமாகவும், பஸ்களின் எண்ணிக்கை உயர்வு காரணமாகவும் புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று கடந்த தி.மு.க ஆட்சி காலத்தின் போது 2010ம் ஆண்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக திருவாரூர் நகராட்சி 30வது வார்டுக்குட்பட்ட தியாகபெருமாநல்லூர் பகுதியில் 18 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு பஸ் நிலையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

The post தற்காலிக ஆசிரியர் காலி பணி இடத்திற்கு இன்றுக்குள் விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: