ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில்தொகுப்பூதியத்தில் இடைநிலை ஆசிரியர் பணி

பெரம்பலூர், ஜூலை 8: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத் துறை யின்கீழ் அரசு ஆதிதிராவி டர் நல தொடக்கப்பள்ளிக ளான ஆதனூர், நத்தக் காடு, அயன்பேரையூர், பசும்பலூர், சிறுகன்பூர், தேனூர், அ.மேட்டூர், அய்ய னார்பாளையம், குரூர், நெய்க்குப்பை மற்றும் செ.மாவிலங்கை ஆகிய 11 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை தொகுப்பூதியத்தில் தற்கா லிகமாக பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகிறது.

தற்காலிக இடைநிலை ஆசிரியர்களுக்கான விண் ணப்பப் படிவம் நாளை (9 ம் தேதி) பிற்பகல் 2மணி வரை பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவ லகத்தில் வழங்கப்படும். விண்ணப்பதாரர்களிடமி ருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியா கவோ, அஞ்சல் மூலமாக வோ உரிய கல்வித்தகுதிச் சான்று நகல்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்டக் கலெக்டர்அலுவலகப் பெரு ந்திட்ட வளாகம், பெரம்ப லூர்- 621212 என்ற முகவ ரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப் பலாம்.

மேற்கண்ட காலிப்பணியிட த்தில் சேர விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு D.T.Ed., முடித்திருத்தல் வேண்டும்.தற்காலிக இடை நிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ12,000 ஊதியமாக நியமிக்கப்பட்டுள்ளது. தற் காலிக இடைநிலை ஆசிரி யர்களுக்கான விண்ணப் பங்களை நாளை 9ம் தேதி மாலை 4 மணிக்குள் பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்கு டியினர் நல அலுவலகத் தில் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களு க்குஆசிரியர் தகுதித்தேர்வு (TET PAPER – I) தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்களை கொண்டு மட்டுமே நிரப்பப் படும்.மேற்கண்ட தற்காலிக ஆசிரியர்கள்பதவிக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் இனத்தவருக்கு முன் னுரிமை வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் இடைநிலை ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசி ரியர் தகுதித்தேர்வு (TET) தேர்ச்சி பெற்றிருப்பின், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள் ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பெரம்பலூர் மாவட்டத்தில் காலிப்பணி யிடங்களாக உள்ள இடை நிலை ஆசிரியர் பணியி டங்களை நிரந்தரப் பணி யாளர்களைக் கொண்டு நிரப்பிடும்வரை தகுதி பெற்ற பணிநாடுநர்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக நிரப் பிக் கொள்ள அனுமதிக்கப் படுகிறது. நிரந்தரப் பணி யாளர்களைக் கொண்டு காலிப்பணியிடம் நிரப்பப் படும் நாள் முதல் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பணியமர்த்தப்பட்ட தற்கா லிக தொகுப்பூதிய பணி யாளர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பணியில் நியமனம் செய் யப்படும் நாள் முதல் 2025 ஏப்ரல்.முடிய உள்ள மாதங் களுக்கு மட்டும் தற்காலிக மாக பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பணியமர்த்தப் படும். மேலும் கூடுதல் விவ ரங்களுக்கு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவ லகப் பெருந்திட்ட வளாகத் தின் கீழ்தளத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்டக் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள் ளார்.

 

The post ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில்தொகுப்பூதியத்தில் இடைநிலை ஆசிரியர் பணி appeared first on Dinakaran.

Related Stories: