பேரளி கிராமத்தில் நாய் கடித்து பெண் மான் உயிரிழப்பு

குன்னம், டிச.8: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரளி கிராமத்தில் நாய் கடித்து பெண் மான் உயிரிழந்தது. அரியலூர் சாலையில் உள்ள சித்தளி வன காப்பு காட்டிலிருந்து அருகிலுள்ள பேரளி கிராமத்திற்கு நேற்று காலை பெண் மான் ஒன்று வழி தவறி வந்தது. பேரளி ஊராட்சி மன்ற அலுவலகம், பிள்ளையார் கோவில் வழியாக நடுத்தெரு சென்று அங்குள்ள ஒரு முள்செடி அருகே ஒதுங்கி அந்தமான் நின்றதாக கூறப்படுகிறது.

அந்த மானை அங்கு நின்றிருந்த சுமார் 6 தெரு நாய்கள் விரட்டி கடித்து குதறி உள்ளது. பதற்றத்துடன் ஓடிய மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. பின்னர் இதை அறிந்த பேரளி ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்கள் இறந்து போன மானை அங்குள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் இறந்து போன மானிற்கு பிரேத பரிசோதனை செய்து காட்டில் புதைத்தனர்.

 

Related Stories: