சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.99,040க்கு விற்பனை : வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்தது!!

சென்னை : தங்கம் விலை ஆண்டு இறுதியான இந்த மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையிலும், வரலாறு காணாத வகையிலும் உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. இதன் ஒரு பகுதியாக தங்கம் விலை கடந்த 15ம் தேதி பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 120க்கு விற்பனையானது. கடந்த 16ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,320 குறைந்து, ஒரு பவுன் ரூ.98 ஆயிரத்து 800க்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,400க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.99,200க்கும் விற்றது.

வெள்ளியும் நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜெட் வேகத்தில் அதிகரித்தது. அதாவது, ஒரே நாளில் வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ஒரு கிராம் ரூ.222க்கும், கிலோவுக்கு ரூ.11 ஆயிரமும் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் விற்றது. இதைத் தொடர்ந்து நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,440க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.99,520க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.224க்கும், கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.12,380க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.99,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.221க்கும், கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

Related Stories: