அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆர்.என்.ஆர். ரக நெல் அதிகபட்சமாக 2,201க்கு விற்பனை

*ஒரே நாளில் 5,360 நெல் மூட்டைகள் வரத்து

ராணிப்பேட்டை : அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று ஆர்.என்.ஆர். ரக நெல் அதிகபட்சமாக ரூ.2,201க்கு விற்பனையானது. மேலும், நேற்று ஒரே நாளில் 5,360 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன.ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் நெல் மற்றும் பல்வேறு தானியங்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று ஒரே நாளில் 5,360 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன.நேற்றைய 75 கிலோ நெல் மூட்டைகளின் விற்பனை விலை விவரம் பின்வருமாறு:

ஏடிடி 37 ரக குண்டு நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,300க்கும் அதிகபட்ச விலையாக ரூ.1,729க்கும், கோ 51 ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,200க்கும் அதிகபட்ச விலையாக ரூ.1,489க்கும், கோ 55 ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,569க்கும் அதிகபட்ச விலையாகரூ.1,786க்கும், 606 ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,300க்கும் அதிகபட்ச விலையாக ரூ.2,191க்கும், ஆர்.என்.ஆர் ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,589க்கும் அதிகபட்ச விலையாக ரூ.2,201க்கும், நர்மதா ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.2,031க்கும் அதிகபட்ச விலையாக ரூ.2,141க்கும், கோ 53 ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,440க்கும் அதிகபட்ச விலையாக ரூ.1,446க்கும், கோ 45 ரக நெல் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,465க்கும், 1010 ரக நெல் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,300க்கும், பூமிகா ரக நெல் குறைபட்ச மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,191க்கும், ஸ்ரீ ரக நெல் குறைபட்ச மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,037க்கும், கிருஷ்ணா ரக நெல் குறைபட்ச மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,100க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.

விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டு அவர்களது வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. மேலும், சோளம், கம்பு, உளுந்து, கேழ்வரகு, தேங்காய் கொப்பரை, நிலக்கடலை, எள்ளு ஆகியவற்றையும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரலாம் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சே.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

The post அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆர்.என்.ஆர். ரக நெல் அதிகபட்சமாக 2,201க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: