தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியின் மருத்துவ பங்குதாரராக காவேரி மருத்துவமனை இணைப்பு

சென்னை: தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியின் அதிகாரப்பூர்வ மருத்துவ பங்குதாரராக காவேரி மருத்துவமனை இணைந்து உள்ளது. தமிழ்நாடு ப்ரீமியர் லீக், தமிழகத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களாலும், வீரர்களாலும் எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டித் தொடர்களுள் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (TNPL) போட்டியின் மூன்றாவது ஆண்டாக அதிகாரப்பூர்வ மருத்துவ பங்குதாரராக காவேரி மருத்துவமனை இணைந்து உள்ளது.

இதுதொடர்பாக காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: ஒரு போட்டித்தொடர் முழுவதிலும் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு விரிவான மருத்துவ ஆதரவை காவேரி மருத்துவமனை வழங்க திட்டமிட்டுள்ளது. இத்தொடர் இடம்பெறும் ஒவ்வொரு மைதானம் மற்றும் இடங்களில் காவேரி மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர்கள் குழு தங்கியிருந்து, அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் சிகிச்சை வழங்கும்.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (TNPL), நமது மாநிலத்தில் தோன்றி, நாடெங்கிலும் புகழ் பெற்றிருக்கும் ஒரு மிகச்சிறப்பான விளையாட்டாகும். இளம் கிரிக்கெட் வீரர்கள், அவர்களது திறமையை உலகறியச் செய்வதற்கு சரியான வாய்ப்பை வழங்கும் ஒரு சிறந்த தளமாக இருந்து வருகிறது. இந்த போட்டித் தொடர் முழுவதிலும் உடல்நலத்தோடு தங்களது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி சிறப்பாக விளையாட அவர்களுக்கு உதவ எமது மருத்துவமனைகளின் சேவை பயன்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியின் மருத்துவ பங்குதாரராக காவேரி மருத்துவமனை இணைப்பு appeared first on Dinakaran.

Related Stories: