பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகளுக்கு உறுதுணையாக இருந்து ஊக்கமளித்த மயிலாடுதுறை நாகப்ப படையாட்சியாரின் நினைவு நாள் பேரணி மற்றும் கூட்டம் சமூகநீதி சத்திரியர் பேரவை சார்பில் நடந்தது. விழாவிற்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெகமுருகன் தலைமை தாங்கினார்.

வழக்கறிஞர் இ.செல்வராஜ், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஆர்.கலியமூர்த்தி, வன்னியர் மேம்பாட்டு இயக்க தலைவர் லோகசம்பத், நாகப் படையாட்சி இளைஞர் மன்ற நிர்வாகி ஜெ.ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் அளித்த பேட்டியில், ‘‘நாகப்ப படையாட்சியாரின் வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும்’’ என்றார்.

The post பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: