வரும் 7ம்தேதி நடக்கிறது ஒன்றிய அரசு பணியாளர் தேர்வு

திருச்சி, ஜூலை 5: திருச்சியில் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வு வரும் 7ம்தேதி நடைபெற உள்ளது. இதில் 3370 பேர் பங்கேற்க உள்ளனர். ஒன்றிய அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக நடைபெறவுள்ள Personel Assistant in EPFO and Nursing officer in ESIC-2024 என்னும் தோ்வு ஜூலை 7ம் தேதி காலை 9.30 மணி 11.30 மணி வரையிலும் மற்றும் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 9 தோ்வு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தோ்வினை மொத்தம் 3370 தோ்வா்கள் எழுத உள்ளனா். மேலும், 9 தேர்வுக்கூட மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்னா். இப்போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள மூன்று இயங்கு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில் துணை கலெக்டர் நிலையில் ஒரு அலுவலா், துணை தாசில்தார், முதுநிலை வருவாய் ஆய்வாளர், ஆயுதம் ஏந்திய போலீசார் ஒருவர் ஆகியோர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

தோ்வு மையத்தை ஆய்வு செய்யும் பொருட்டு தாசில்தார் நிலையில் 9 ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனா். தோ்வு மையத்தில் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தோ்வு மையத்தில் கண்காணிப்பு செய்திட, 3 ஆண் போலீசார் மற்றும் 2 பெண் போலீசார் என மொத்தம் 5 போலீசார்கள் நியமிக்கப்பட்டு உள்ளனா். தோ்வு அறைகளில் தோ்வு எழுதும் ஒவ்வொரு 24 தோ்வா்களுக்கும் இரண்டு அறை கண்காணிப்பாளா்கள் வீதம் நியமிக்கப்பட்டு உள்ளனா். தோ்வு எழுத வரும் தோ்வாளா்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தோ்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என மத்திய அரசுப் பணியாளர் தோ்வாணையத்தால் தொிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

The post வரும் 7ம்தேதி நடக்கிறது ஒன்றிய அரசு பணியாளர் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: