கும்பக்கரையில் மழைக்கால பேரிடர் மீட்பு விழிப்புணர்வு செயல் விளக்கம்

 

பெரியகுளம், ஜூலை 5: மழைக்காலம் முன்னிட்டு பொதுமக்களுக்கு பேரிடர் மீட்பு விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி தீயணைப்புத் துறையினர் சார்பில் நடத்தப்பட்டது. தென் மேற்கு பருவ மழை கேரளா பகுதியில் தீவிரமடைந்த நிலையில், பெரியகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக கும்பக்கரை அருவி வனப்பகுதியில் பொது மக்களுக்கான விழிப்புணர்வு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், பொது மக்களுக்கு பேரிடர் காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் மூலம் செயல்விளக்கமும் செய்து காட்டப்பட்டது. நிகழ்ச்சியில், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

The post கும்பக்கரையில் மழைக்கால பேரிடர் மீட்பு விழிப்புணர்வு செயல் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: