3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்..!!

சென்னை: 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதி சாக்ஷியா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா போன்ற புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த சட்டங்கள் அமல்படுத்தியதை கண்டித்தும், இதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்

*மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து தல்லாகுளம் தபால் நிலையம் வரை வழக்கறிஞர்கள் கண்டன பேரணி.

*நாகையில் வழக்கறிஞர்கள் கருப்புச் சட்டை அணிந்து 3 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

*புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்.

*திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தை 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம்.

*கும்பகோணம் வருமான வரி அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

*பல்லடம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

*கடலூர் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி முன்பு விருத்தாசலம் வழக்கறிஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.

The post 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: