தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேரலாம்

சிவகங்கை, ஜூலை 3: கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினராக சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்களின் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த நலவாரியத்தில், உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடம் இருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேரலாம் appeared first on Dinakaran.

Related Stories: