நாகர்கோவிலில் முக்கியசாலைகளில் ₹9.60 கோடியில் நடைபாதை அமைக்க முடிவு அரசுக்கு மாநகராட்சி கருத்துரு அனுப்பியுள்ளது

நாகர்கோவில், ஜூலை 3: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நீதிமன்ற சாலை, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முதல் வெட்டூர்ணிமடம் வரை உள்ள சாலை உள்பட பல்வேறு சாலைகள் செப்பனிடப்பட்டு, இருபுறமும் நடைபாதை அமைத்து அழகுப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையம் முதல் கட்டப்பொம்மன் ஜங்சன் வரை உள்ள அவ்வை சண்முகம் சாலையை சீரமைத்து இருபுறமும் நடைபாதை அமைக்க வேண்டும் என குமரி மாவட்ட நகை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஷாஜகான் தலைமையில் துணை தலைவர் கணேசன், செயலாளர் கோபாலகிருஷ்ணன், இணைச்செயலாளர்கள் நாஞ்சில் ராஜா, சண்முகசுந்தர், ெபாருளாளர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாநகராட்சி மேயர் மகேசிடம் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை பெற்றுக்கொண்ட மேயர் அவ்வைசண்முகம் சாலையில் நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடைபாதை அமைக்கும்போது ஆக்ரமிப்பு எந்தவித பாரபட்சம் இன்றி அகற்றப்படும். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் போடப்பட்டுள்ளது. நீதிமன்ற சாலை, வெட்டூர்ணிமடம் முதல் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி வரை இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டு அந்த சாலை அழகுப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் அவ்வைசண்முகம் சாலை, கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் ஆலயம் ஜங்சன், சவேரியார் ஆலய ஜங்சன் முதல் செட்டிகுளம் வரை, வேப்பமூடு ஜங்சன் முதல் செட்டிகுளம் ஜங்சன் வரை, டதி பள்ளி ஜங்சன் முதல் கலெக்டர் அலுவலகம் வரை இருபுறமும் நடைபாதைகள் அமைக்க அரசுக்கு ரூ.9.60 கோடி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதி வழங்கியதும், மாநகர பகுதியில் இந்த பணிகள் நடக்கும். என்றார்.

The post நாகர்கோவிலில் முக்கியசாலைகளில் ₹9.60 கோடியில் நடைபாதை அமைக்க முடிவு அரசுக்கு மாநகராட்சி கருத்துரு அனுப்பியுள்ளது appeared first on Dinakaran.

Related Stories: