குமரி கடலோர பகுதியில் 256 மின்மாற்றிகள் சிறப்பு பராமரிப்பு

நாகர்கோவில், ஜூலை 3: கன்னியாகுமரி மின்பகிர்மான வட்டத்திற்கு கீழ் மொத்தம் 46 மின்விநியோக பிரிவு அலுவலகங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் மின்மாற்றிகள் வருகிறது. மின்மாற்றிகளை பராமரிக்க தமிழக அரசு மற்றும் தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக தேசியநெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள மின்மாற்றிகள் சிறப்பு பராமரிப்பு கடந்த 19ம் தேதி நடந்தது. இதில் மொத்தம் 848 மின்மாற்றிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் கன்னியாகுமரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் தலைமையில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர்கள் மேற்பார்வையில் நடந்தது.

2வது கட்டமாக கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை சாலைகளில் அமைந்துள்ள 256 மின் மாற்றிகளில் சிறப்பு பராமரிப்பு பணி ேநற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கன்னியாகுமரி, ரஸ்தாகாடு, ஆரோக்கியபுரம், வாரியூர், காணிமடம், சின்னமுட்டம், காந்திமண்டபம், கோவளம், கீழ மணக்குடி, மேலமணக்குடி, அன்னைநகர், பள்ளம், சொத்தவிளை, சங்குதுறை, கேசவன்புத்தன்துறை, பொழிக்கரை, பெரியகாடு, ராஜாக்கமங்கலம்துறை, அழிக்கால், பிள்ளைதோப்பு, ஈசன்தங்கு, முட்டம், கடியப்பட்டணம், சின்னவிளை, பெரியவிளை, புதூர், மண்டைக்காடு, வெட்டுமடை, கொட்டில்பாடு, குளச்சல், கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, சைமன் காலனி, மிடாலம், உதயமார்த்தாண்டம், மேல் மிடாலம், ஹெலன்காலனி, இணயம், புத்தன்துறை, ராமன்துறை, தேங்காப்பட்டணம், இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், இடப்பாடு, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, கொல்லங்கோடு, மேடவிளாகம், நீரோடி ஆகிய மேற்கு கடற்கரை ஊர்களை உள்ளடக்கிய மின் மாற்றிகளில் சிறப்பு பராமரிப்பு மாலை 5 மணி வரை நடந்தது. மின்மாற்றிகள் பராமரிப்பு பணி முடியும் வரை அந்தந்த ஊர்களில் மின்தடை செய்யப்பட்டது. அடுத்து 3வது கட்டமாக வருகிற 5ம் தேதி சிறப்பு பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதில் நெடுஞ்சாலைகளில் விடுபட்ட மின்மாற்றிகள் பராமரிக்கப்பட இருப்பதாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் தெரிவித்தார்.

The post குமரி கடலோர பகுதியில் 256 மின்மாற்றிகள் சிறப்பு பராமரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: