கேரளாவில் 10ம் வகுப்பு தேர்ச்சியானவர்களுக்கு எழுதப்படிக்க கூட தெரியவில்லை: அமைச்சர் பேச்சால் சர்ச்சை

திருவனந்தபுரம்: கேரள அரசில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் சஜி செரியன். அடிக்கடி ஏதாவது சர்ச்சையான கருத்துக்களை பேசுவது இவரது வழக்கம். கடந்த சில வருடங்களுக்கு முன் அரசியலமைப்பு சட்டம் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்ததை தொடர்ந்து இவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஆலப்புழாவில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சஜி செரியன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது: கல்வித் தரம் மிகவும் குறைந்து வருகிறது. கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்குக் கூட ஒழுங்காக எழுதவோ, படிக்கவோ தெரியாத நிலை உள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மாணவர்கள் தோல்வியடைந்தால் அது அரசின் தோல்வி என்று கூறும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

அதனால் அனைவரையும் வெற்றி பெற வைக்க அரசு முயற்சிக்கிறது. இது நல்லதல்ல. எனவே இந்த நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் சஜி செரியனின் இந்தப் பேச்சு கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கல்வித் தரம் மற்றும் மாநிலங்களை ஒப்பிடும்போது மிகவும் சிறப்பாக உள்ளது என்று கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி கூறியுள்ளார்.

The post கேரளாவில் 10ம் வகுப்பு தேர்ச்சியானவர்களுக்கு எழுதப்படிக்க கூட தெரியவில்லை: அமைச்சர் பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: