தேனி என்.எஸ். கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

தேனி, ஜூன் 28: தேனி அருகே வடபுதுபட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடந்தது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். நாடார் உறவின்முறை உபதலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் காசி பிரபு வரவேற்றார்.

கல்லூரியின் இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் கண்ணாயிரம், சேகர், ஜெயராம், ஞான பிரகாசம், தர்மராஜ், ஜவகர்,கல்லூரியின் முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் சுசிலா சங்கர், சரண்யா மற்றும் கிருஷ்ணவேணி, உமாகாந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.இப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் குமாரி தேவிதா மற்றும் பூஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கல்லூரியின் சிறப்பு குறித்தும், அவர்களது கல்வி கற்ற போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து தெரிவித்தனர். துணை முதல்வர் கோமதி நன்றி கூறினார்.

The post தேனி என்.எஸ். கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: