நேஷனல் கல்வி குழுமத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு

காரைக்குடி, ஜூன் 28:காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி, பயர் அண்டு சேப்டி காலேஜ், சாப்டெக் நிறுவனம் என நேஷனல் கல்விகுழுமம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. பயர் அண்டு சேப்டி காலேஜ் முதல்வர் தனசீலன் வரவேற்றார். கல்லூரி தாளாளர் எஸ்.சையது தலைமை வகித்து பேசினார்.

இயக்குனர் மனோகர் முன்னிலை வகித்தனர். காரைக்குடி வடக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். எஸ்.ஐ பிரபாகரன், நேஷனல் சாப்டெக் சிஇஓ முனீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஆசிரியர்கள், மாணவர்கள் எடுத்துக் கொண்டனர். நேஷனல் கேட்டரிங் கல்லூரி முதல்வர் நவீன் நன்றி கூறினார்.

 

The post நேஷனல் கல்வி குழுமத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: