மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

 

சிவகங்கை, ஜூன் 28: சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊரக சமுதாய அமைப்புகள் வட்டாரங்களில் உள்ள மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகிலும், நகர்ப்புற சமுதாய அமைப்புகள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகிலும் இன்று (ஜூன் 28) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 04575-240962 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

The post மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி appeared first on Dinakaran.

Related Stories: