வாகன சோதனையில் 5 பேர் கைது

 

ராமநாதபுரம், ஜூன் 28: ராமநாதபுரத்தில் விற்பனை செய்வதற்காக இரண்டரை கிலோ கஞ்சா வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் புறநகர் பகுதியில் கஞ்ச விற்பனை நடப்பதாக கேணிக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்.ஐ தினேஷ்பாபு தலைமையிலான போலீசார் இளமனூர் ஜங்ஷன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த ஒரு கார் மற்றும் ஒரு டூவீலரை சோதனையிட்டதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடையை சேர்ந்த சிவசுப்பு மகன் கபிலன்(24), வசந்தநகர் ராஜகோபால் மகன் கவுதம்(23), ராமு மகன் உதயபிரகாஷ்(23), ஓம்சக்திநகர் செல்வம் மகன் அஜய்குமார்(23),சேதுபதிந கர் வரதராஜன் மகன் தர்மநாத்(32) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.5 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள், கஞ்சா கடத்த பயன்படுத்தி ஒரு கார் மற்றும் ஒரு டூவீலரை பறிமுதல் செய்தனர்.

The post வாகன சோதனையில் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: