அரசு ஆதி திராவிட நல மாணவர் விடுதி முன்பு பெரிய பள்ளம்: சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: வெள்ளியூரில் உள்ள அரசு ஆதி திராவிட நல மாணவர் விடுதி முன்பு மெகா சைஸ் பள்ளத்தால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். பெரியபாளையம் அருகே வெள்ளியூர் ஊராட்சியில் அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதி உள்ளது. இதில் வெள்ளியூர், கரிகலவாக்கம், தாமரைப்பாக்கம், அமணம்பாக்கம், மாகரல், கன்னிகாபுரம், சேத்துப்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாணவர் விடுதி திருவள்ளூர் – தாமரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

இதில், வெள்ளியூர் கிராமத்தில் சாலையின் ஓரத்தில் மாணவர் விடுதி முன்பு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் மழை நீர்வடிகால்வாய் கட்டப்பட்டது. அப்போது கால்வாயின் மேல், சிமென்ட் சிலாப்பாலான மூடிகள் போடப்பட்டது. ஆனால் இந்த மூடிகளில் விடுதியின் முன்பு உள்ள மூடி மட்டும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு லேசான ஓட்டை ஏற்பட்டது. பின்னர், தற்போது பெரிய அளவில் பள்ளமாக மாறிவிட்டது. இதனால் மாணவர்கள் விடுதிக்கு செல்லும்போது அச்சத்துடன் செல்கிறார்கள், இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தில் விழுந்து அடிபடுகிறார்கள். இந்த பள்ளத்தை மூடி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post அரசு ஆதி திராவிட நல மாணவர் விடுதி முன்பு பெரிய பள்ளம்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: