முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மயில் பலி: பிரேதப்பரிசோதனை செய்து அடக்கம்

முத்துப்பேட்டை, ஜூன் 27: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக மயில் ஒன்று அடிபட்டு காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்துள்ளது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து உடனடியாக முத்துப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் மயிலை மீட்டு அதே இடத்தில் முதலுதவி செய்தனர். இதில் மயிலுக்கு உடல்நிலை மோசமானதையடுத்து, முத்துப்பேட்டை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

அங்கு கால்நடை மருத்துவர் டாக்டர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சோதித்த போது மயில் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் டாக்டர் மகேந்திரன், இறந்த மயிலுக்கு பிரேதப்பரிசோதனை செய்தார். இதில் மயில் மின்சாரம் தாக்கி இறந்தது முதல் கட்டமாக தெரியவந்தது. இதையடுத்து மயிலை பெற்று சென்ற வனத்துறையினர் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்தனர்.

The post முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மயில் பலி: பிரேதப்பரிசோதனை செய்து அடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: