ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

திருவாரூர், ஜூன் 27: திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட் டில் இயங்கி வரும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிட த்திற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நெடுங்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 3 முதுகலை பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம், தமிழ், தாவரவியல்) பணியிடங்களும், அபிசேககட்டளை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 3 முதுகலை பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல், கணக்கு, விலங்கியல்) பணியிடங்களும் காலியாகவுள்ளது. இப்பணியிடங்களுக்கான தகுதிகளாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் ஒரே பாடபிரிவில் பயின்றிருக்க வேண்டும், இத்துடன் இளங்கலை கல்வியில் கல்வி பயின்றிருக்க வேண்டும்,

கல்வி தகுதி மற்றும் வயது முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்வாறு பின்பற்றிட வேண்டும், ஒன்றிற்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த நபர்கள் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது முன்னுரிமைகளாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள், பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் இல்லையெனில் பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் மற்றும் அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள் என முன்னுரிமை வழங்கப்படும். மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித்தகுதி சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் 5ந் தேதிக்குள் அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துளளார்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: