தேசத்தின் வளர்ச்சியை தடுக்கக் கூடியது புகையிலை: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பி பேச்சு

அரியலூர், ஜூன் 27: அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் எதிர்ப்பு தினத்தையொட்டி, நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதைப் பொருட்கள் தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை தடுக்கக் கூடியது என்றார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரி அவர் கலந்து கொண்டு மேலும் பேசுகையில்: புகையிலைப் பொருள்கள் நினை வாற்றலையும், அறிவாற்றலையும், கற்பனை திறனையும் சிதைக்கக் கூடியது. படிப்பில் கவனம் செலுத்த முடியாது. எதிர்கால வாழ்க்கையை சீரழிந்து விடும் பீடி, சிகரெட், பான் மசாலா, பான்பராக் போன்ற எத்தகைய வடிவில் போதைப் பொருள்கள் கிடைத்தாலும் அதனை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்தக் கூடாது என்றார். பின்னர் அவர், போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தான துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில், இணைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் கார்த்திகாயினி, உதவி ஆய்வாளர் சிவனேசன் ஆகியோர் கலந்து கொண்டு இணைய வழி குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். சில்ட்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் நிக்கில் ராஜ் ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, கோகிலா, செவ்வேள், தங்கபாண்டி, அந்தோணிசாமி, ஆய்வக உதவியாளர் மணிகண்டன் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தேசத்தின் வளர்ச்சியை தடுக்கக் கூடியது புகையிலை: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: