ஏகேடி தர்மராஜா பெண்கள் கல்லூரியில் போதை ஒழிப்பு தின விழா

ராஜபாளையம், ஜூன் 27: ராஜபாளையம் ஏகேடி தர்மராஜா பெண்கள் கல்லூரியில் உலக போதை பொருள் ஒழிப்பு தின விழா நடைபெற்றது. ராஜபாளையம் ஏகேடி தர்மராஜா பெண்கள் கல்லூரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினவிழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஆத்ம பிரச்சார ஆலோசகர் ராஜேஷ்குமார் அர்ஜூனராஜா கலந்துகொண்டு, போதை அடிமைத்தனத்திற்கு மனஅழுத்தம் மற்றும் சமூக சூழல் காரணம் என்றும், அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை மாணவிகளிடையே பகிர்ந்து கொண்டார். விழாவில் கல்லூரி முதல்வர் ஜமுனா வரவேற்புரை அளித்தார். கல்லூரியின் அனைத்து துறை ஆசிரியர்கள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

The post ஏகேடி தர்மராஜா பெண்கள் கல்லூரியில் போதை ஒழிப்பு தின விழா appeared first on Dinakaran.

Related Stories: