குத்துச்சண்டை போட்டி: மாணவருக்கு தங்கப்பதக்கம்

சிவகங்கை, ஜூன் 27: ஜம்மு காஷ்மீரில் 4வது யூத் அண்டு ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. தேசிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் ஆந்திரம், கர்நாடகா அரியானா இமாச்சலப் பிரதேசம் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 61 கிலோ எடை பிரிவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான குத்துச்சண்டை ஆண்களுக்கான போட்டியில் தமிழகத்தின் சார்பில் சிவகங்கை சேர்ந்த மாணவர் அருணேஸ்வரன் கலந்து கொண்டு தங்க பதக்கத்தை வென்றார். இம்மாணவரை அப்பகுதி மக்கள் வாழ்த்தினர்.

The post குத்துச்சண்டை போட்டி: மாணவருக்கு தங்கப்பதக்கம் appeared first on Dinakaran.

Related Stories: