நீட் வினாத்தாள் வெளியான விவகாரம்: ஜார்க்கண்டில் 2 பேர் கைது


புதுடெல்லி:நாடு முழுவதும் மே 5ல் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ 6 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை சிபிஐ நேற்று கைது செய்தது. அங்குள்ள ஒயாசிஸ் பள்ளியின் முதல்வர் எஹ்சானுல் ஹக் என்பவர் ஹசாரிபாக் நகரில் நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் பார்வையாளராகவும், ஒயாசிஸ் பள்ளியில் மைய ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் வினாத்தாள் கசிவு தொடர்பாக ஹசாரிபாக் மாவட்டத்தில் மட்டும் 5 பேரை பிடித்து சிபிஐ விசாரித்து வருகிறது. குஜராத்தில் நீட் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் துஷார் பட், ஜெய் ஜலராம் பள்ளி முதல்வர் புருஷோத்தம் ஷர்மா, இடைத்தரகர் விபோர் ஆனந்த், ஆரிப் ஆகிய 4 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

The post நீட் வினாத்தாள் வெளியான விவகாரம்: ஜார்க்கண்டில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: