ஜெயங்கொண்டம் அரசு மாதிரி பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

 

ஜெயங்கொண்டம், ஜூன் 26: ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை ஜெயங்கொண்டம் டிஎஸ்பி இராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டவாறு அண்ணா சிலை நான்கு ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றனர். பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் மீண்டும் பள்ளிக்கே வந்து முடிவடைந்தது. முன்னதாக போதையினால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்டவை குறித்தும் மாணவர்களுக்கு போதை ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தவிக்குமார் தலைமை வகித்தார். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆரோக்கியநாதன் வரவேற்று பேசினார்.

விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் போலீசார்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் இன்ஸ்பெக்டர் ராமராஜன் போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நீதி நன்றி கூறினார்.

The post ஜெயங்கொண்டம் அரசு மாதிரி பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: