பனை மரத்தில் கார் மோதி பாட்டி, பேரன், பேத்தி பலி

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம், வளையர்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது மாலிக் (34). இவர், மனைவி அகம்மது நிஷா (26), குழந்தைகள் அஸ்ரின் பாத்திமா (5), அப்ரீன் பாத்திமா (3), 6 மாத குழந்தை சீனி பர்ஹான் மற்றும் மாமியாரான பரிதா பீவி (59) ஆகியோருடன் குற்றாலம் சென்றனர்.

நேற்று மாலை காரில் வாலிநோக்கம் நோக்கி வந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் கார் வந்தபோது, சாயல்குடி அருகே நரிப்பையூர் எல்லை புஞ்சை என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பனைமரத்தில் மோதியது. இதில் தலை மற்றும் பரிதாபீவி, குழந்தைகள் அப்ரீன் பாத்திமா, 6 மாத குழந்தை சீனி பர்ஹான் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post பனை மரத்தில் கார் மோதி பாட்டி, பேரன், பேத்தி பலி appeared first on Dinakaran.

Related Stories: