சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 11,108 லட்டுகளால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்

திருவள்ளூர்: ஆனி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு திருப்பந்தியூரில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் 11,108 லட்டுகளால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த திருப்பந்தியூரில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்வ விநாயகர் கோயிலில் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தியையொட்டி நேற்றுமுன்தினம் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு செல்வ விநாயகர் 11,108 லட்டுவால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

லட்டுக்களால் விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளிப்பதை திருப்பந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வருகை தந்து விநாயகரை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் அலங்காரம் செய்யப்பட்ட லட்டுகள் பிரித்து கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கு அளிக்கப்பட உள்ளதுதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

The post சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 11,108 லட்டுகளால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் appeared first on Dinakaran.

Related Stories: