விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூன் 28ல் நடக்கிறது

 

திண்டுக்கல், ஜூன் 25: திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 28ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள், அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள்,

ஒழுங்குமுறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு குறித்த தொழில்நுட்பங்கள், பட்டுப்புழு வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் பெற ஆலோசனைகள், முன்னோடி வங்கி மற்றும் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களின் மூலமும் விவசாயிகளுக்கு கடன் சம்பந்தப்பட்ட விளக்கங்களும் அளிக்கப்படவுள்ளது. எனவே இந்த கூட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் கலந்துகொண்டு, விவசாயம் சார்ந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூன் 28ல் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: