அத்தையை குத்தி கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

செங்கல்பட்டு, ஜூன் 25: குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெரு, சஞ்சீவி அப்பார்ட்மென்ட்டில் வசித்து வருபவர் ஜெயமுருகன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. ஜெயமுருகனின் உடன்பிறந்த சகோதரியின் மகனான அருண்குமார் (32). இவர் அடிக்கடி தனது தாய்மாமாவான ஜெயமுருகன் வீட்டுக்கு வந்துள்ளார். அருண்குமாரிடம் கிருஷ்ணவேணி தனது கணவரின் சகோதரியுடைய மகன் என்பதால் சகஜமாக பழகியுள்ளார். அதை தவறாக எண்ணிய அருண்குமார் கிருஷ்ணவேணியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு கிருஷ்ணவேணி உடன்படாததால் அவரை கடந்த 14.6.2016 அன்று கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினார்.

இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது மகனான அருண்குமாரை சிட்லப்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நேற்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி முன்பு இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அருண்குமார் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தொடர்ந்து அருண்குமாரை புழல் சிறையில் அடைத்தனர்.

The post அத்தையை குத்தி கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: