வேடந்தாங்கல் ஊராட்சியில் பொது மருத்துவ முகாம்

மதுராந்தகம்: வேடந்தாங்கல் ஊராட்சியில் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து வேடந்தாங்கல் ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம் தலைமை தாங்கினார். மன்ற உறுப்பினர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சாமிநாதன் வரவேற்றார்.இந்த முகாமில் சளி, காய்ச்சல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பெண்களுகள் சம்பந்தப்பட்ட நோய்கள், அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்னைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 10க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும், மருந்து மாத்திரைகளை வழங்கினர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை வேடந்தாங்கல் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கற்பக விநாயகா மருத்துவமனை நிர்வாகம் செய்திருந்தது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

The post வேடந்தாங்கல் ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: