வடமாநில வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

தாம்பரம், ஜூன் 27: மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமோல் (32). இவர் ஆதம்பாக்கம் கணேஷ் நகர், 2வது தெருவைச் சேர்ந்த பத்மாவதி (61) என்பவரின் 7 சவரன் தங்கச் சங்கிலியை பறித்த வழக்கில் ஆதம்பாக்கம் போலீசாரால் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில், குற்றவாளி அமோல் சென்னை, திருமங்கலம், கீழ்ப்பாக்கம், கோட்டூர்புரம், அண்ணாநகர் ஆகிய இடங்களிலும் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மாநகர காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து அமோலை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்பேரில், அமோல் குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

The post வடமாநில வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Related Stories: