கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது

போச்சம்பள்ளி, ஜூன் 23: மத்தூர் அருகே, மாந்தோப்பில் சாராய ஊறல் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், மத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், எஸ்ஐக்கள் கௌதம், அன்பழகன், மகாலிங்கம் மற்றும் போலீசார், சின்னஆலேரஅள்ளி பகுதியில், சோதனை நடத்தினர். சோதனையின் போது, மாந்தோப்பு பகுதியில் சுமார் 150 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன்(44), மூக்காகவுண்டனூர் சக்திவேல்(36) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

The post கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: