ராஜஸ்தானில் 10 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு: ரூ.20 லட்சம் ரொக்கம், நாட்டு துப்பாக்கி பறிமுதல்

புதுடெல்லி: ராஜஸ்தானில் சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக 10 இடங்களில் சிபிஐ நேற்று விசாரணை நடத்தியது. ஷாரூக் என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 40 மெட்ரிக் டன் அளவுக்கு மணல் எடுத்து சென்றார். அப்போது ஷாரூக் உரிய முறையில் அனுமதி பெறாமல் மணல் எடுத்து சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யபட்டார். சட்ட விரோதமாக மணல் அள்ளுவது தொடர்பாக ராஜஸ்தான் உயர் நீதிமன்ற ஜெய்ப்பூர் பெஞ்ச் உத்தரவுப்படி பண்டி காவல்துறை பதிவு செய்த சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கை சிபிஐ ஏற்று கொண்டது. இந்நிலையில் சட்டவிரோத மணல் கொள்ளை விவகாரத்தில் ஜெய்ப்பூர், டோங்க், நாகவுர், பில்வாரா, கரோலி மற்றும் சிகார் ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பணம் மற்றும் நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post ராஜஸ்தானில் 10 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு: ரூ.20 லட்சம் ரொக்கம், நாட்டு துப்பாக்கி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: