ஜூலை 1ல் அமலாக உள்ள குற்றவியல் சட்டங்களை ஒத்திவைக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: வரும் ஜூலை 1ம் தேதி அமலுக்கு வர உள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களையும் ஒத்திவைக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது ட்விட்டர் பதிவில், ‘‘நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களும் வரும் ஜூலை 1ம் தேதி அமலுக்கு வர உள்ளது. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருந்து 146 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த மசோதாக்கள் குறித்து நாடு முழுவதும் உள்ள மக்களிடம் விவரிக்கப்படவில்லை. எனவே இந்த 3 சட்டங்களையும் அமல்படுத்துவதை தள்ளிப் போட வேண்டும்.’’ என கூறி உள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர். ஜெய்ராம் ரமேஷ் தனது மற்ற பதிவுகளில், ‘‘ஒன்றிய அரசு தேர்வில் முறைகேடுகளை தடுக்க ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. அதை விட எந்த வினாத்தாள் கசிவும் ஏற்படாமல் நடவடிக்கை எடுப்பதுதான் சட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்’’ என்றார்.

The post ஜூலை 1ல் அமலாக உள்ள குற்றவியல் சட்டங்களை ஒத்திவைக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: