59 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

 

விருதுநகர், ஜூன் 22: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் 25 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, 14 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை, 9 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அடையாள அட்டை, 4 பேருக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை, 7 பேருக்கு ஆதார் அட்டை என 59 திருநங்கையருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சமூக நலத்துறை அலுவலர் ஷீலாசுந்தரி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

The post 59 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: