யோகா தின விழிப்புணர்வு வைகை அணை பூங்காவில் மாணவர்கள் விழிப்புணர்வு

ஆண்டிபட்டி, ஜூன் 21: கடந்த 2015 முதல் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சர்வதேச யோகா தின விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் பள்ளி மாணவர்கள் நேற்று வைகை அணை பூங்காவின் மேல் பகுதியில் பலவகையான யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கூறுகையில், “வைகை அணை போன்ற சுற்றுலா தலங்களில் மாணவர்கள் யோகா செய்வதன் மூலம் இங்கு சுற்றுலா வரும் பலதரப்பட்ட மக்களுக்கு யோகாவின் மகத்துவத்தை தெரியப்படுத்துவது மட்டுமில்லாமல் நல்ல விழிப்புணர்வாகவும் அமையும்’’ என்றனர்.

The post யோகா தின விழிப்புணர்வு வைகை அணை பூங்காவில் மாணவர்கள் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: