சாலையோர கடைகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம்

சாயல்குடி, ஜூன் 21: சாயல்குடி வாரச்சந்தை சாலையோர கடைகளால் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சாயல்குடி பேருந்து நிலையம் அருகே வாரந்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை இயங்கி வருகிறது. இதற்காக கடந்த 2020-21ம் நிதி ஆண்டில் ரூ.1 கோடியை 91 லட்சம் ரூபாய் மதிப்பில் வாரச்சந்தை வளாகத்தில் 150 சிறு கடைகள் மற்றும் தரைக்கடைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இடப்பற்றாக்குறையால் வியாபாரிகள் வாரச்சந்தை வளாகத்திற்கு வெளியே சாலையோரங்களில் கடைகள் விரிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாரச்சந்தை நாளன்று சாலையோரங்களில் கடைகள் அமைக்கப்படுவதால் அருகில் உள்ள சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் நோயாளிகளை கொண்டு செல்ல முடியாமல் ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் சாலையோரக் கடைகளை வாரச்சந்தைக்குள் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சாலையோர கடைகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம் appeared first on Dinakaran.

Related Stories: