வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

திண்டுக்கல், ஜூன் 20: திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வீரபிரபாகரன் (32). இவர் சம்பவத்தன்று சிறுமலை பிரிவு அருகே நடந்து சென்ற போது 2 பேர் வழிமறித்து பீர் பாட்டிலை உடைத்து காட்டி மிரட்டி ரூ.200 பணம், செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து வீரபிரபாகரன் புகாரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் நல்லாம்பட்டியை சேர்ந்த உதயகுமார் (29), தாமோதரன் (23) பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: