பணியாளர் பற்றாக்குறை, பராமரிப்பின்மையே ரயில் விபத்துகள் ஏற்படக் காரணம்: ஒன்றிய அமைச்சருக்கு எம்பி கடிதம்

சென்னை: மேற்கு வங்கத்தில் கஞ்சன் ஜங்கா ரயில் விபத்தைப் போல, மேலும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க 3 காரணிகளை வலுப்படுத்த வேண்டும் என்று வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: ரயில்வே கட்டுமானங்களில் பராமரிப்பின்மை, நிதி பற்றாக்குறை, போதிய பணியாளர்கள் நியமிக்கப்படாதது போன்ற 3 காரணங்களால் அடிக்கடி ரயில் விபத்துகள் ஏற்படுகின்றன என்று ஏற்கெனவே நான் எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டுள்ளேன் ஆனால் மேலே குறிப்பிட்ட குறைபாடுகள் இன்னமும் தொடர்கின்றன. ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறையால் பாதுகாப்பு கருவிகளை இயக்கக்கூட போதுமான பணியாளர்கள் இல்லை. இப்போது ரயில்வே துறை 5,700 தொழில்நுட்ப பணியிடங்கள் உட்பட 9,000 பணியிடங்களில் மட்டும் ஆட்களை பணியமத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் லோகோ பைலட் பணியிடங்கள் 70 சதவீதப் பணியிடங்கள் குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரயில்வே துறையில் 1.8 லட்சம் தொழில்நுட்ப பணியிடங்கள் உட்பட்ட 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது வெறும் 9000 பணியிடங்கள் மட்டும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது நியாயமில்லாதது. ரயில்வே தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த பாதுகாப்பு பணியாளர்கள் போதிய அளவில் இல்லாததே அடிக்கடி விபத்துகள் ஏற்பட காரணம். எனவே, ரயில்வேத் துறை பாதுகாப்பு மீது கவனம் செலுத்தி போதுமான பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

The post பணியாளர் பற்றாக்குறை, பராமரிப்பின்மையே ரயில் விபத்துகள் ஏற்படக் காரணம்: ஒன்றிய அமைச்சருக்கு எம்பி கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: